இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் மீதான ஐக்கிய நாடுகளின் சர்வதேச சமவாயத்தின் 33 ஆம் உறுப்புரையின் கீழ் ஒவ்வோர் அரச நிறுவனத்திலும் இயலாமையுடைய நபர்களுக்கு சேவை வழங்குவதற்கான மையத்தைத் தாபித்தல் ஒரு கடப்பாடாகும். செப்டெம்பர் 23 ஆம் திகதி கடைப்பிடிக்கப்படும் சர்வதேச சைகைமொழி தினத்தையொட்டி, தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் தொழிற்படும் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் ‘இயலாமையுடையோருக்கான ஊடக சேவை நிலையம்’ தாபிக்கப்பட்டதுடன் இலங்கையின் செவிப்புலனற்றோர் சமுதாயத்தில் தகவலுக்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்காக சுயாதீனத் தொலைக்காட்சி வலையமைப்பின் பிரதான செய்தி ஒளிபரப்பில் (ITN News) சைகைமொழி உரைபெயர்ப்பும் ஆரம்பிக்கப்பட்டது.
ஊடக சேவை நிலையம் மற்றும் சைகைமொழி உரைபெயர்ப்பு ஒளிபரப்பு சேவை ஆகியவை தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ டலஸ் அலகப்பெரும அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் ஒன்றிணைந்த முன்னணியுடன் (DOJF) இணைந்து ஆரம்பிக்கப்பட்டன. இந்த முன்னெடுப்பிற்கு அவசியமான தலைமைத்துவத்தையும் வழிகாட்டலையும் உரிய அதிகாரிகளுக்கு வழங்கிய வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ டலஸ் அலகப்பெரும அவர்களுக்கு இயலாமையுடைய நபர்களின் சமூகத்தின் சார்பில் இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் ஒன்றிணைந்த முன்னணி மனமார்ந்த கௌரவத்தையும் நன்றியையும் தெரிவிக்கின்றது.