இயலாமையுடன் கூடிய நபர்களுக்கான அமைப்புக்களின் 

கடந்தகால கருத்திட்டங்கள்

நாம் ஒன்றாக எழுவோம் 

USAID IDEA கருத்திட்டம் - 2021-2022

“இயலாமையுடைய பெண்களின் உரிமைகள் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறை பற்றிய பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக தேசிய மட்டத்திலான தளமொன்றை உருவாக்குவதற்கு இயலாமையுடைய பெண்களின் பங்கேற்றலைப் பலப்படுத்தல்’ என்னும் பால்நிலைச் சமத்துவ மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைக் கருத்திட்டமொன்றை

NDI உள்ளடங்கலான தேர்தல் மறுசீரமைப்புக் கருத்திட்டம்

உள்ளடங்கலான தேர்தல் மறுசீரமைப்பு மீதான கருத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக தேசிய சனநாயக நிறுவகம் இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் ஒன்றிணைந்த முன்னணியுடன் கைகோர்த்தது. 2021 ஆம் ஆண்டு செப்டெம்பரில் ஆரம்பிக்கப்பட்ட இக்கருத்திட்டம், ஒரு வருடம் செயற்படுத்தப்படவுள்ளது.

பரிந்து வாதாடலையும் விழிப்புணர்வையும் விருத்தி செய்தல் மற்றும் பலப்படுத்துதல்

  பரிந்து வாதாடலையும் விழிப்புணர்வையும் விருத்தி செய்தல் மற்றும் பலப்படுத்துதலின் பொருட்டு SHIA- Sweden இன் நிதியிடலுடன் 2005 ஜனவரி முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியின்போது இக்கருத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நிர்வாக மற்றும் முகாமைத்துவ ஆதரவுக் கருத்திட்டம்

  இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் நிர்வாக மற்றும் முகாமைத்துவக் கொள்திறனைப் பலப்படுத்துவதற்காக, பார்வையற்றோருக்கான சிவோவாம் நிலையத்தின் நிதியிடலுடன், 2005 ஜனவரி தொடக்கம் 2006 ஜனவரி வரையான காலப்பகுதியில் இக்கருத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கெதிராக இயலாமையுடைய நபர்களின் சமுதாயங்களுக்கிடையில் வலுவூட்டப்பட்ட நடவடிக்கைக்கான முன்னெடுப்பு (IASC இயலாமை பற்றிய வழிகாட்டல்களுக்கான முன்னோடிக் கருத்திட்டம்)

பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கெதிரான இம்முன்னோடிக் கருத்திட்டம், பால்நிலை அடிப்படையிலான வன்முறை தொடர்பில் இயலாமை உள்ளடக்கப்படுதலை விரிவுபடுத்துவதற்குப் பிராந்திய மற்றும் தேசிய மட்டங்களில் ஆதரித்து வாதாடுதலில் ஈடுபடுவதற்காக இயலாமையுடைய நபர்களின் சமுதாயத்தில் பால்நிலை அடிப்படையிலான வன்முறை பற்றிய வழிகாட்டலை வழங்குவதற்கும் விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும், குடும்பத் திட்டமிடல் அமைப்புகளின் நிதியிடலுடன் 2018-2019 காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

IDEA -USAID கருத்திட்டம் 2019-2020

‘விரிவானதோர் ஆதரித்து வாதாடல் மற்றும் பரிந்து வாதாடற் செயற்பாட்டின் மூலம் பெரும்போக்கு அபிவிருத்தியில் இயலாமையை உள்ளடக்கல்’ என்னும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவராண்மையினால் (USAID) இந்த நிலையான தொகையைக் கொண்ட வெகுமதி 2019 ஆகஸ்ட் 15 ஆம் திகதியிலிருந்து 2020 ஆகஸ்ட் 14 ஆம் திகதி வரை வழங்கப்பட்டது.

Emergency Call

In case of urgent, feel free to ask questions.

Not readable? Change text. captcha txt
தமிழ்