USAID IDEA கருத்திட்டம் - 2021-2022

“இயலாமையுடைய பெண்களின் உரிமைகள் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறை பற்றிய பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக தேசிய மட்டத்திலான தளமொன்றை உருவாக்குவதற்கு இயலாமையுடைய பெண்களின் பங்கேற்றலைப் பலப்படுத்தல்’ என்னும் பால்நிலைச் சமத்துவ மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைக் கருத்திட்டமொன்றை, Management Systems International (இதனகத்துப்பின்னர் “MSI” என அழைக்கப்படும்) இன் ஊடாக அவர்களின் “பொறுப்புக்கூறலுக்கான அதிகரித்த தேவை மற்றும் ஈடுபாட்டுக் “ கருத்திட்டத்தின் கீழ் (MSI/IDEA) USAid இன் நிதியுதவியுடன், 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் ஒன்றிணைந்த முன்னணி ஆரம்பித்துள்ளதுடன் இது ஒரு வருட காலம் தொடரவுள்ளது.

 

இயலாமையுடைய பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கெதிரான வன்முறையை ஒழித்தலும் இயலாமை பற்றிய கண்ணோட்டத்தைப் பலமான கொள்கைகள், மூலோபாயங்கள் மற்றும் செயற்றிட்டங்களாக பெரும்போக்குடன் இணைப்பதற்காக ஆதரித்து வாதாடுவதற்கு சிவில் சமூக நிறுவனங்களைப் பலப்படுத்தலும் இக்கருத்திட்டத்தின் ஒட்டுமொத்த குறிக்கோளாகும்.

இந்த மானிய முன்னெடுப்பின் மூலம், பால்நிலை அடிப்படையிலான வன்முறைப் பிரச்சினைகளைச் சிறப்பாக எதிர்கொள்வதற்கு நிலைபேறான உறவுநிலையைப் பேணுவதற்காக, தேசிய மற்றும் மாகாண மட்டத்திலான பங்கீடுபாட்டாளர்களுடன் ஒத்துழைப்பு, பங்காண்மை மற்றும் ஒருங்கிணைப்பை அதிகரிப்பதற்கு, இயலாமையுடைய பெண்களை உள்ளடக்கிய தேசிய மட்டத்திலான தளமொன்றைத் தாபிப்பதற்கு பால்நிலை அடிப்படையிலான வன்முறை ஒழித்தல் மூலோபாயங்கள், பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் CRPD ஆகியவை பற்றிய பயிற்சி மற்றும் அறிவூட்டலை இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் ஒன்றிணைந்த முன்னணி நடாத்தியது. இயலாமையுடைய பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கெதிரான அனைத்து விதமான வன்முறைகளையும் ஒழிப்பதற்கும் அம்முன்னெடுப்பை ஊக்குவிப்பதற்கும் பலமாகக் குரலெழுப்புவதற்கான இயலாமையுடைய பெண்களுக்கான தேசிய மட்டத்திலான தளமொன்றை உருவாக்குவதற்கு இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் ஒன்றிணைந்த முன்னணி எதிர்பார்க்கின்றது 

Recent Posts
தமிழ்