பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கெதிராக இயலாமையுடைய நபர்களின் சமுதாயங்களுக்கிடையில் வலுவூட்டப்பட்ட நடவடிக்கைக்கான முன்னெடுப்பு (IASC இயலாமை பற்றிய வழிகாட்டல்களுக்கான முன்னோடிக் கருத்திட்டம்)
பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கெதிரான இம்முன்னோடிக் கருத்திட்டம், பால்நிலை அடிப்படையிலான வன்முறை தொடர்பில் இயலாமை உள்ளடக்கப்படுதலை விரிவுபடுத்துவதற்குப் பிராந்திய மற்றும் தேசிய மட்டங்களில் ஆதரித்து வாதாடுதலில் ஈடுபடுவதற்காக இயலாமையுடைய நபர்களின் சமுதாயத்தில் பால்நிலை அடிப்படையிலான வன்முறை பற்றிய வழிகாட்டலை வழங்குவதற்கும் விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும், குடும்பத் திட்டமிடல் அமைப்புகளின் நிதியிடலுடன் 2018-2019 காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
குறிக்கோள்கள்
இயலாமையுடைய நபர்களையும் அவர்களின் பராமரிப்பாளர்களையும் பால்நிலை அடிப்படையிலான வன்முறை குறித்த மையப் பயிற்சித் திட்டங்களில் ஒருங்கிணைத்துக் கொள்ளல்.
இயலாமையுடைய பெண்களையும் சிறுமிகளையும் அவர்களின் உள்ளடக்கம் பற்றிய அபிவிருத்தி மூலோபாயங்களிலும் நடைமுறைப்படுத்தற் செயற்பாடுகளிலும் ஈடுபடுத்தல்.
இயலாமையுடைய நபர்கள் பால் மற்றும் வயது அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளதான தற்போதுள்ள பால்நிலை அடிப்படையிலான வன்முறைப் பதிற்செயற்பாட்டுச் சேவைகளை ஒருங்கிணைத்தல்.