இயலாமையுடன் கூடிய நபர்களுக்கான அமைப்புக்களின்
சாதனைகள்
நாம் ஒன்றாக எழுவோம்
i. வாதாடல் மற்றும் பரிந்து வாதாடல் பிரசாரங்களின் மூலம் கொள்கை மாற்றங்கள்
2016 பெப்ரவரி - தொடர்ச்சியான பரிந்து வாதாடல் மற்றும் ஆதரித்து வாதாடல் முயற்சிகளின் ஒரு பெறுபேறாக 2016 ஆம் ஆண்டில் இலங்கையில் இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் மீதான ஐக்கிய நாடுகளின் சமவாயம் ஏற்றுறுதி செய்யப்பட்டது.
2017 மார்ச் - – முதலாவது இயலாமைத் துறைசார் நிழல் அறிக்கை (உலகளாவிய பருவகால மீளாய்வு) ஜெனீவாவிலுள்ள மனித உரிமைகள் பேரவைக்கு 2017 ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் விளைவாக, இயலாமையுடைய நபர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான பங்கீடுபாட்டாளராக இலங்கை அரசாங்கத்தினாலும் ஐநா முகவராண்மைகளினாலும் இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் ஒன்றிணைந்த முன்னணி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
2018 ஜூன் – – Series of தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இலங்கையில் இயலாமையை உள்ளடக்கும் தேர்தல்கள்–தொழில்நுட்ப செயற்குழுவிற்குமிடையே இயலாமையை உள்ளடக்கும் தேர்தல்களை நடைமுறைப்படுத்துவதற்கான தொடரான கலந்துரையாடல்கள் நடைபெற்றன. அதன் விளைவாக, இயலாமையுடைய நபர்கள் பற்றி மேலும் தகவல்களை சேகரிக்கும் பொருட்டு வாக்காளர்களின் விபரங்களைக் கோரும் படிவமொன்று விநியோகிக்கப்பட்டது. அதேபோன்று முன்னோடி மதிப்பீடுகள் நான்கு மாகாணங்களில் நடத்தப்பட்டன. DIESL-TWG இற்கான செயலகமாக இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் ஒன்றிணைந்த முன்னணி தொழிற்பட்டதுடன் 2018-2020 காலப்பகுதியின்போது அதன் ஏற்பாட்டாளராக இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் தலைவர் செயற்பட்டார்.
2018 ஜூன் – சுருக்க குறியீட்டுடனான அரசாங்கத் தகவல் சேவைகளை அணுகுவதற்காக (1919 Hotline) 2021 ஆம் ஆண்டில் செவிப்புலனற்ற நபர்களுக்கு வீடியோ அழைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டது.
2018 ஆகஸ்ட் – ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நஷனல் அமைப்பினால் வசதி செய்யப்பட்டு, நிரல் அமைச்சுக்கள் மற்றும் சமூக சேவை நிறுவனங்கள் ஆகியவற்றுடன் சேர்ந்து சனாதிபதி செயலகத்தினால் ஒருங்கிணைக்கப்பட்ட ‘திறந்த அரசாங்கப் பங்காண்மைக்கான’ தேசிய செயற்றிட்டத்திற்கு இரண்டு மைல்கற்கள் (இயலாமை தொடர்பான பிரதான பிரச்சினைகள்) உள்ளடக்கப்பட்டன.
2016 பெப்ரவரி - பாராளுமன்ற வளாகத்தில் இயலாமையுடைய நபர்களுக்கான வாகனத் தரிப்பிடப் பகுதிகளை ஒதுக்குவதற்காக பரிந்து வாதாடப்பட்டதுடன் அவ்வருடமே அது பயன்பாட்டிற்கும் வந்தது.
2019 மார்ச் - இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் கோரிக்கையின் பேரில், 2019 மார்ச் 21 ஆம் திகதி இடம்பெற்ற வரவுசெலவுத்திட்ட உரையின் மீதான சமூக சேவைகள் அமைச்சின் குழு நிலையில் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் இயலாமையுடைய நபர்கள் குறித்த பிரச்சினைகளை எழுப்பினர். அதன் விளைவாக, மாதாந்தம் இயலாமையுடைய நபர்களுக்கான கொடுப்பனவாக வழங்கப்படும் 5,000/- ரூபாவிலிருந்து 100/- ரூபாவைக் குறைக்கும் முன்மொழிவு கைவிடப்பட்டது.st of March 2019. As a result, the proposed monthly deduction of Rs.100/- from the Rs 5000 disability allowance was withdrawn.
2019 மார்ச் - இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் கோரிக்கையின் பேரில், பாராளுமன்றக் கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் பாராளுமன்றச் சபாநாயகர் இயலாமையுடைய நபர்களைப் புண்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரிவித்தார்.
2019 ஜூன் – இயலாமை குறித்த நாடு தழுவிய மதிப்பீடொன்றை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தின் 2019 வரவுசெலவுத் திட்டத்திலிருந்து அரசாங்க நிதிகளை ஒதுக்குவதற்கும் இலங்கை அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டத்திலிருந்து அரசாங்க நிதிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அளவுகோல் ஒன்றாக இயலாமையை உள்ளடக்குவதற்கும் பரிந்து வாதாடப்பட்டது.
2019 செப்டெம்பர் – பாராளுமன்றத்தின் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் இயலாமையுடைய நபர்களின் பிரச்சினை எழுப்பப்பட்டது.
2019 ஒக்டோபர் – இயலாமை தொடர்பான பிரச்சினைகளின் உள்ளடக்கம் மற்றும் இலங்கையில் இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் மீதான ஐக்கிய நாடுகளின் சமவாயத்தினைப் பாதுகாத்தல், மேம்படுத்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் ஆகியவற்றிற்காக 2019 இல் இடம்பெற்ற கடந்த சனாதிபதித் தேர்தலின்போது பிரதான அரசியல் கட்சிகளுடன் இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் ஒன்றிணைந்த முன்னணி தொடர்ச்சியாகப் பரிந்து வாதாடற் பிரசாரங்களில் ஈடுபட்டது. அதன் விளைவாக, மூன்று முன்னணி அரசியல் கட்சிகளின் கொள்கை விஞ்ஞாபனங்களில் உள்ளடக்கப்படுவதற்காக அவசியமான மொழி மற்றும் எழுத்து வடிவத்தை இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் ஒன்றிணைந்த முன்னணி வழங்கியது.
2020 ஜனவரி – சமூக சேவைகள் அமைச்சருடன் 2019 இல் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களின் விளைவாக, இயலாமையுடைய நபர்களுக்கான தேசியப் பேரவையில் (NCPD) பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் ஒன்றிணைந்த முன்னணியினால் முடிந்தது. இயலாமையுடைய நபர்களுக்கான தேசியப் பேரவை (NCPD) இயலாமை தொடர்பான அலுவல்கள் பற்றிய உயர் தேசிய நிறுவனமாகும்.
2020 மார்ச் - இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் மீதான ஐக்கிய நாடுகளின் சமவாயத்தின் 33 ஆம் உறுப்புரைக்கமைவாக இயலாமையுடையோர் உரிமைகள் வரைவுச் சட்டமூலத்தின் உருவாக்கத்திற்கு (DDRB) இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் ஒன்றிணைந்த முன்னணி துடிப்பான பங்களிப்பு வழங்கியது. இயலாமையுடையோர் உரிமைகள் வரைவுச் சட்டமூலம் தொடர்பான இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் பூர்வாங்கப் பரிந்துரைகளடங்கிய அறிக்கை 2020 ஆம் ஆண்டில் இயலாமையுடைய நபர்களின் செயலகத்திற்கு (NSPD) சமர்ப்பிக்கப்பட்டது.
2020 ஏப்ரல் – கொவிட்-19 இனால் ஏற்பட்ட பொதுமுடக்கத்தின்போது, கொவிட் இயலாமை அவசர உதவி நிலையம் (COVID-DEC) ஒன்று இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் ஒன்றிணைந்த முன்னணியினால் தாபிக்கப்பட்டது. தொடர்ச்சியான தலையீடுகளின் விளைவாக, இயலாமையுடையோர் கொடுப்பனவை பெற்றுக்கொள்ளாதோருக்கான ஒரு சமூக நிவாரணமாக 5,000/- ரூபாவை அரசாங்கம் விநியோகித்தது. அதனைப் போன்று, இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் கோரிக்கையின் பேரில், மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக முதுகுத்தண்டுப் பிரச்சினையுடைய 49 பேருக்கு 193,140/- ரூபாவை இயலாமையுடைய நபர்களுக்கான தேசியப் பேரவை விநியோகித்தது. மேலும், தொலைக்காட்சி அலைவரிசைகளின் ஊடாக கொவிட் தொடர்பான செய்திகளை சைகை மொழியில் ஒளிபரப்புவதற்கும் ஆதரித்து வாதாடியது.
2021 செப்டெம்பர் – இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் மீதான ஐக்கிய நாடுகளின் சர்வதேச சமவாயத்தின் 33 ஆம் உறுப்புரையின் கீழ் ஒவ்வோர் அரச நிறுவனத்திலும் இயலாமையுடைய நபர்களுக்கு சேவை வழங்குவதற்கான மையத்தைத் தாபித்தல் ஒரு கடப்பாடாகும். அரசாங்கத்துடனான தொடர்ச்சியான கலந்துரையாடல்களின் விளைவொன்றாக, தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் தொழிற்படும் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் ‘இயலாமையுடையோருக்கான ஊடக சேவை நிலையம்’ தாபிக்கப்பட்டதுடன் 2021 ஆம் ஆண்டில், இலங்கையின் செவிப்புலனற்றோர் சமுதாயத்தில் தகவலுக்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்காக சுயாதீனத் தொலைக்காட்சி வலையமைப்பின் பிரதான செய்தி ஒளிபரப்பில் (ITN News) சைகைமொழி உரைபெயர்ப்பு ஆரம்பிக்கப்பட்டது.
2021 ஒக்டோபர் – – The DOJF has been invited for ‘Civil Society Consultation on the ‘Draft Report on the Community Based Corrections System in Sri Lanka’ by the Ministerial Consultant Committee on Justice which was convened by Assistant Secretary General of Parliament in 2021. The DOJF is collaborating with National Democratic Institute (NDI) and Westminster Foundation for Democracy (WFD) in preparing suggestions for the above report.
ii. ஆலோசனை மட்டத்திலான தலையீடுகள்
2020 டிசெம்பர் – – நீதியமைச்சின் கீழ், இயலாமையுடைய பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகளின் உள்ளடக்கத்துடன், அதன் இயலாமை–நேயப் பரிந்துரைகளைப் புதிய ‘அரசியலமைப்பு வரைவுக் குழுவிற்கு’ இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் ஒன்றிணைந்த முன்னணி வழங்கியது.
2021 ஏப்ரல் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கையின் பிரகாரம், அதன் ‘உள்ளடங்கலான தேர்தல்கள்’ தொடர்பான 2022-2025 மூலோபாயத் திட்டத்திற்கான பரிந்துரைகளை இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் ஒன்றிணைந்த முன்னணியினால் வழங்க முடிந்தது.
iii. இயலாமை இயக்கத்தைப் பலப்படுத்தல்
2017 ஏப்ரல் – – கட்புலக் குறைபாடுகளைக் கொண்டுள்ள நபர்களுக்கும் செவிப்புலனற்ற மற்றும் செவிப்புலக் குறைபாடுகளைக் கொண்டுள்ள நபர்களுக்கும் அவர்களின் நாளாந்தத் தேவைப்பாடுகளில் உதவுவதற்காக கொழும்பு மாவட்டத்திலுள்ள அரசாங்க மற்றும் தனியார் துறைகளின் சேவை வழங்குநர்களுக்கு சைகைமொழி உரைபெயர்ப்பாளர் உதவிச்சேவை வழங்குவதற்காக ஒரு சைகைமொழி உரைபெயர்ப்பு சேவை நிலையத்தைத் தாபித்தல். நாம் 2018 ஆம் ஆண்டிலிருந்து செயற்பட்டு வருகின்றோம்.