இயலாமையுடன் கூடிய நபர்களுக்கான அமைப்புக்களின்
முழு உறுப்பினராக
நாம் ஒன்றாக எழுவோம்
அறிமுகம்
2001 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் ஒன்றிணைந்த முன்னணி (DOJF), உடல், செவிப்புல, கட்புல மற்றும் அறிவுசார் இயலாமை என்னும் அனைத்து வகையான இயலாமைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி, நாடு முழுவதும் பரந்துள்ள 30 உறுப்பு நிறுவனங்களைக் கொண்டுள்ள இயலாமையுடைய நபர்களின் (PwD) நிறுவனங்களின் ஓர் ஒருங்கிணைந்த அமைப்பாகும். சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சின் கீழ் தொழிற்படும் இயலாமையுடைய நபர்களுக்கான தேசியச் செயலகத்தில் இயலாமையுடைய நபர்களின் நிறுவனமொன்றாக (DPO) இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் ஒன்றிணைந்த முன்னணி பதிவு செய்யப்பட்டுள்ளது. இயலாமையுடைய நபர்களுக்கு ஒப்புரவு மற்றும் கண்ணியத்துடனான தடைகளற்ற, சுயாதீன வாழ்வை உறுதிப்படுத்தி அவர்களின் உரிமைகளுக்கான பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக ஆதரித்து வாதாடும் குழுவொன்றாக இணைந்து பணியாற்றுவதற்கான ஆணையையும் இலக்கையும் இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் ஒன்றிணைந்த முன்னணி கொண்டுள்ளது. இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் ஒன்றிணைந்த முன்னணி, ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூகப் பேரவையில் விசேட ஆலோசகர் அந்தஸ்துடன் அங்கீகரிக்கப்பட்ட இயலாமையுடைய நபர்களின் நிறுவனமொன்றாகும்.
இணைவது எவ்வாறு
இயலாமையுடைய நபர்களின் சமுதாயத்திற்குப் பரந்த சேவையை வழங்குவதற்காக இயலாமையுடைய நபர்களுக்கு வலுவூட்டும் இலக்குடன் இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் ஒன்றிணைந்த முன்னணி (DOJF) புதிய உறுப்பு நிறுவனங்களை இணைத்துக்கொள்ள ஆரம்பித்துள்ளது. உங்களின் நிறுவனம் இவ்விடயத்தில் ஆர்வமுடையதாக இருப்பின், தயவுசெய்து உங்களின் நிறுவனம் மற்றும் அதன் செயற்பாடுகள் பற்றியதொரு சுருக்கமான விளக்கத்தை இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் ஒன்றிணைந்த முன்னணி, இல.33. ராஜ மாவத்தை, இரத்மலானை என்னும் முகவரிக்கு அனுப்பவும் அல்லது கீழுள்ள உறுப்பு விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து உரிய அனைத்து இணைப்புக்களையும் எமக்கு அனுப்பவும்.