பரிந்து வாதாடலையும் விழிப்புணர்வையும் விருத்தி செய்தல் மற்றும் பலப்படுத்துதல்
பரிந்து வாதாடலையும் விழிப்புணர்வையும் விருத்தி செய்தல் மற்றும் பலப்படுத்துதலின் பொருட்டு SHIA- Sweden இன் நிதியிடலுடன் 2005 ஜனவரி முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியின்போது இக்கருத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இக்கருத்திட்டத்தின் கீழ், செல்வாக்கு மிக்க தீர்மானம் மேற்கொள்ளும் அமைப்புகளுடன் பரிந்து வாதாடற் பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு பல்வேறு வலையமைப்புகள் மற்றும் அழுத்தம் பிரயோகிக்கும் குழுக்களை இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் ஒன்றிணைந்த முன்னணி ஒழுங்கு செய்து பங்குபற்றியது. மேலும், இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் மற்றும் உரித்துக்கள் பற்றிய பல்வேறு செயலமர்வுகளையும் கூட்டங்களையும் நடத்தியது.