இயலாமையுடன் கூடிய நபர்களுக்கான அமைப்புக்களின் 

நாம் என்ன செய்கின்றோம்

Protect the Rights of Disabled

    • இயலாமையுடைய நபர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், மேம்படுத்தல் மற்றும் முன்னேற்றுதல்.
    • பரிந்து வாதாடல் பிரசாரங்களின் மூலமாக கொள்கை உரையாடல் மற்றும் கொள்கை உருவாக்கத்திற்கான தலையீடுகள்.
    • இயலாமையுடைய நபர்களின் சமூக அந்தஸ்து மற்றும் நலனோம்புகையை மேம்படுத்துவதை நோக்கிப் பணியாற்றல்.
    • உறுப்பு நிறுவனங்களின் உள்ளகக் கொள்திறன்களை விருத்தி செய்தலும் பலப்படுத்தலும்
    • இயலாமையுடைய நபர்கள் சுயாதீனமான வாழ்க்கையொன்றை வாழ்வதற்காக சமூக மற்றும் பொருளாதார வாய்ப்புகளுக்காக ஆதரித்து வாதாடுதல்.
    • நிறுவனம்சார் தொழிற்பாடுகளில் சனநாயகத்தையும் வெளிப்படைத் தன்மையையும் ஊக்குவித்தல் மற்றும் உறுப்பு நிறுவனங்கள் தங்களின் நிறுவனம்சார் கொள்திறனை விருத்தி செய்வதற்காக அவற்றைப் பலப்படுத்தி ஆதரவளித்தல்.
    • இயலாமையுடைய சிறுவர்கள் மற்றும் பெண்களின் உள்ளடக்கத்திற்காக, இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் மீதான ஐக்கிய நாடுகளின் சமவாயத்தின் (UNCRPD) நியமங்களுக்கமைவாக ஒவ்வொரு துறையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தல்.
    • இயலாமையுடைய நபர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்களையும் நிலைமைகளையும் கண்காணித்தல் மற்றும் அவசியமானவாறாக அவற்றில் தலையீடு செய்தல்.
    • தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச மட்டத்திலுள்ள இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக நிறுவனங்களுடனான வலையமைப்புகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்தல்.
gallery-home-dojf-6

பிரதான செயற்பாடுகளும் கருத்திட்டங்களும்

  • அதிகாரிகள், தீர்மானம் மேற்கொள்வோர் மற்றும் ஏனைய பங்கீடுபாட்டாளர்கள் மத்தியில் இயலாமையுடைய நபர்கள் பற்றிய விரிவாக்கப்பட்ட விழிப்புணர்வு.
  • புதிய இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் சட்டமூலத்தின் சட்டவாக்கம் மற்றும் இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் மீதான ஐக்கிய நாடுகளின் சமவாயத்தின் ஏற்றுறுதிப்படுத்தல் ஆகியவற்றிற்கான மேம்படுத்தப்பட்ட நிலைமைகள்.
  • இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் உறுப்பு நிறுவனங்களின் விரிவாக்கப்பட்ட கொள்திறனின் ஊடாக இயலாமை மீதான சட்டவாக்கம், ஒழுங்குவிதிகள் மற்றும் கொள்கைகள் ஆகியவற்றை கண்காணிப்பதற்கும் அமுலாக்குவதற்குமான மேம்படுத்தப்பட்ட முன்நிபந்தனைகள்.
  • இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் ஒன்றிணைந்த முன்னணி மற்றும் அதன் உறுப்பு நிறுவனங்களின் விரிவுபடுத்தப்பட்ட நிறுவனம்சார், சனநாயக மற்றும் ஆதரித்து வாதாடற் கொள்திறன்.
  • இயலாமையுடைய நபர்களுக்கான பயிற்சி மற்றும் கல்விக்கான விரிவுபடுத்தப்பட்ட வாய்ப்புகள்.
  • சைகைமொழி உரைபெயர்ப்பு வசதியை வழங்குதல்.
4

அண்மையில் இடம்பெற்ற செயற்பாடுகளுக்கான உதாரணங்கள்

  • இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் பற்றி, இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் மீதான ஐக்கிய நாடுகளின் சமவாயத்தின் கோட்பாடுகள் மற்றும் நியமங்கள் மீதான அதிக முக்கியத்துவத்துடன், பொதுமக்களுக்கும், சிவில் சமூகத்திற்கும் அரசாங்கத்திற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஊடாகக் கலந்துரையாடல்களை நடத்துதல்.
  • உரிய பங்கீடுபாட்டாளர்களுடன் அணுகல் கணக்காய்வுகளை மேற்கொள்ளல்
  • இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் வரைவுச் சட்டமூலத்தின் சட்டவாக்கம் மற்றும் இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் மீதான ஐக்கிய நாடுகளின் சமவாயத்தின் விருப்பத்தெரிவு ஒழுங்குமரபை ஏற்றுறுதிப்படுத்தல் ஆகியவை தொடர்பாகப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பரிந்து வாதாடல்
  • இயலாமையின் வகையீடு மற்றும் பிரிவாக்கல் ஆகியவற்றிற்காக வரைவிலக்கணங்களுடனான கொள்கை உள்ளீடுகளை வழங்குதல்.
  • இயலாமையுடைய நபர்களின் உரிமை மீறல்கள் தொடர்பான சம்பவங்களைக் கண்காணிப்பதற்காக வடிவமைக்கப்படும் மாவட்டக் கண்காணிப்புக் குழுக்களின் உருவாக்கம் மற்றும் பயிற்சி.
  • பொது நூலகங்கள், பாடசாலைகள், விசேட பாடசாலைகள், உரிய அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றிற்கு விநியோகிக்கப்படும் ஆண்டிற்கு இருமுறை வெளியாகும் இயலாமை பற்றிய செய்திமடலான ‘அத-ஹித’( ‘Atha-Hitha’) பிரசுரிக்கப்படல்.
  • பெரும்போக்கு அபிவிருத்திச் செயன்முறைக்குள் இயலாமையை உள்ளடக்குவதற்கான கொள்கை மட்ட இடையீடுகள் பற்றி உயர் மட்ட அரசியல், அரச அலுவலர்களுடனும் தீர்மானம் மேற்கொள்வோருடனும் தொடர்பாடல்களை மேற்கொள்ளல்.
Emergency Call

In case of urgent, feel free to ask questions.

Not readable? Change text. captcha txt
தமிழ்