MyRight Sweden இன் கூட்டுச் செயற்பாட்டுக் (JA) கருத்திட்டம்


இது இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் (DOJF) பிரதான கருத்திட்டம் என்பதுடன் மூன்று வருட (2015-2017) காலப்பகுதியையும் கொண்டிருந்தது. பின்னர், இக்கருத்திட்டம் 2018 இலிருந்து 2021 வரை நீட்டிக்கப்பட்டது. இக்கருத்திட்டம் Sri Lanka MyRight இன் மேற்பார்வையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. "புதிய இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் சட்டமூலத்தின் சட்டவாக்கத்திற்கும் இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் உறுப்பு நிறுவனங்களின் விரிவாக்கப்பட்ட கொள்திறனின் ஊடாக இயலாமை மீதான சட்டவாக்கம், ஒழுங்குவிதிகள் மற்றும் கொள்கைகள் ஆகியவற்றின் அமுலாக்கத்தின் வினைத்திறன் மிக்க கண்காணிப்பிற்குமான மேம்படுத்தப்பட்ட நிலைமைகள்" என்பதே கருத்திட்டத்தின் பிரதான குறிக்கோள் என்பதுடன், கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறாக ஐந்து (5) உடனடிக் குறிக்கோள்களும் காணப்படுகின்றன. 

 

  1. அதிகாரிகள், தீர்மானம் மேற்கொள்வோர் மற்றும் ஏனைய பங்கீடுபாட்டாளர்கள் மத்தியில் இயலாமையுடைய நபர்கள் பற்றிய விரிவாக்கப்பட்ட விழிப்புணர்வு.
  2. புதிய இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் சட்டமூலத்தின் சட்டவாக்கம் மற்றும் இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் மீதான ஐக்கிய நாடுகளின் சமவாயத்தின் ஏற்றுறுதிப்படுத்தல் ஆகியவற்றிற்கான மேம்படுத்தப்பட்ட நிலைமைகள்.
  3. இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் உறுப்பு நிறுவனங்களின் விரிவாக்கப்பட்ட கொள்திறனின் ஊடாக இயலாமை மீதான சட்டவாக்கம், ஒழுங்குவிதிகள் மற்றும் கொள்கைகள் ஆகியவற்றை கண்காணிப்பதற்கும் அமுலாக்குவதற்குமான மேம்படுத்தப்பட்ட நிலைமைகள்.
  4. இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் மற்றும் அதன் உறுப்பு நிறுவனங்களின் விரிவுபடுத்தப்பட்ட நிறுவனம்சார், சனநாயக மற்றும் ஆதரித்து வாதாடற் கொள்திறன்.
  5. இயலாமையுடைய நபர்களுக்கான பயிற்சி மற்றும் கல்விக்கான விரிவுபடுத்தப்பட்ட வாய்ப்புகள். 

 

உடனடிக் குறிக்கோள் ஒவ்வொன்றின் கீழும் பல செயற்பாடுகள் திட்டமிடப்பட்டு 2015 ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது இக்கருத்திட்டம் இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பிரதான கருத்திட்டமாக பிரதான வகிபங்கொன்றினைக் கொண்டுள்ளதுடன் அதன் அனைத்து உறுப்பு நிறுவனங்களும் திறன் அபிவிருத்திச் செயற்பாடுகளிலிருந்து நேரடியாகப் பயனடைகின்றன. இயலாமை பற்றிய சட்டவாக்கத்தின் நடைமுறைப்படுத்தலைக் கண்காணிப்பதன் மூலம் இலங்கையில் உள்ள இயலாமையுடைய நபர்கள் பயனடைவர். நெருக்கமான ஒத்துழைப்பின் மூலம் அரசியல் அதிகாரமானது இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் பற்றிய அதிக புரிதலைக் கொண்டிருக்கும்.

Recent Posts
தமிழ்