IDEA -USAID கருத்திட்டம் 2019-2020
IDEA -USAID கருத்திட்டம் 2019-2020
விரிவானதோர் ஆதரித்து வாதாடல் மற்றும் பரிந்து வாதாடற் செயற்பாட்டின் மூலம் பெரும்போக்கு அபிவிருத்தியில் இயலாமையை உள்ளடக்கல்’ என்னும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவராண்மையினால் (USAID) இந்த நிலையான தொகையைக் கொண்ட வெகுமதி 2019 ஆகஸ்ட் 15 ஆம் திகதியிலிருந்து 2020 ஆகஸ்ட் 14 ஆம் திகதி வரை வழங்கப்பட்டது.
பிரதான குறிக்கோள்
இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் மற்றும் பால்நிலை உள்ளடங்கலான மனித உரிமைகள் அறிவினை வழங்கி, இயலாமையுடைய நபர்களைத் திரட்டுவதன் மூலம் விரிவான இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் கண்காணிப்பு வலையமைப்பொன்றை முன்னெடுத்தல் மற்றும் மாவட்ட/மாகாண மட்டத்தில் கண்காணித்தல் வலையமைப்பொன்றை உருவாக்கி அதன் மூலமாக தேசிய மட்ட இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் கண்காணிப்பை உருவாக்குதல்.
கருத்திட்டத்தின் நோக்கம்
இலங்கையில் இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் மீறப்படுவதைக் கண்காணிப்பதற்கான தகுந்த பொறிமுறை எதுவுமில்லை. மேலும், சம்பவங்கள்/மீறல்கள் தொடர்பான தகவல்கள் நம்பகரமானவையான இல்லாதபோது, தேசிய மட்டத்திலும் அத்துடன் மாகாண மட்டத்திலும் உரிமை மீறல் பிரச்சினைகள் தொடர்பாக மேலும் நடவடிக்கைகளை அல்லது இடையீடுகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
அறிக்கையிடற் செயன்முறையை மேலும் உள்ளடங்கற்தன்மை மிக்கதாகவும் சான்றுகளின் அடிப்படையிலானதாகவும் ஆக்குவதற்கும் பரந்த பிரதிநிதித்துவமொன்றையும் உரிமை மீறல்களுக்கான பதிற் செயற்பாட்டையும் கொண்டிருப்பதற்கும், மனித உரிமைகள் பற்றிய அறிவூட்டலை, குறிப்பாக பால்நிலை உள்ளடங்கலான இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் மீதான அறிவூட்டலை, இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் ஒன்றிணைந்த முன்னணி முன்னெடுத்ததுடன் நாடெங்கும் பரந்துள்ள இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் உறுப்பு நிறுவனங்களின் வலையமைப்பின் பங்குபற்றலுடனும் பங்காண்மையுடனும் மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் கண்காணிப்பு வலையமைப்பொன்றையும் உருவாக்கியது.
நிகழ்வுகள்
- பிராந்திய மட்டச் செயலமர்வுகள்
இயலாமையுடைய இளைஞர்கள் மற்றும் பெண்களை உள்ளடக்கிய, இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் மற்றும் பால்நிலை விழிப்புணர்வு அத்துடன் தலைமைத்துவத்தின் ஊடான கல்வி ஆகியவை உள்ளடங்கலான மனித உரிமைகள் மீதான பிராந்திய மட்டச் செயலமர்வு மேல் மாகாணத்திலும் அத்துடன் தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் நிறைவு செய்யயப்பட்டுள்ளது. இயலாமையுடைய 56 பங்குபற்றுநர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றியதுடன் மேற்சொல்லப்பட்ட விடயப்பரப்புகளில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
- UNCRPD இன் இலகுவாக வாசிக்கக்கூடிய வடிவத்திலான சைகை மொழி வீடியோ
தேசிய மட்ட மனித உரிமைகள், CPRD மற்றும் பால்நிலைச் செயலமர்வுகளில் பங்குபற்ற வேண்டியவர்களான செவிப்புலனற்ற ஆட்களுடன் இலகுவாகத் தொடர்பாடலை மேற்கொள்ளும் பொருட்டு UNCRPD இன் இலகுவாக வாசிக்கக்கூடிய வடிவத்திலான சைகை மொழி வீடியோ வடிவம், சிங்கள மற்றும் தமிழ் உப தலைப்புகளுடன் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
- DRMN இணைய நுழைவாயில்
இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் கண்காணிப்பு முறைமைக்கான(DRMS) இணைய அடிப்படையிலான பிரயோகத்தின் வடிவமைப்பு மற்றும் விருத்தியாக்கல் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் இம்முறைமை தற்போது பரீட்சார்த்த முறையில் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.