NDI உள்ளடங்கலான தேர்தல் மறுசீரமைப்புக் கருத்திட்டம்
உள்ளடங்கலான தேர்தல் மறுசீரமைப்பு மீதான கருத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக தேசிய சனநாயக நிறுவகம் இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் ஒன்றிணைந்த முன்னணியுடன் கைகோர்த்தது. 2021 ஆம் ஆண்டு செப்டெம்பரில் ஆரம்பிக்கப்பட்ட இக்கருத்திட்டம், ஒரு வருடம் செயற்படுத்தப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சித்திட்ட இடையீட்டின் மூலம், வாக்களிப்பு நிலையங்களுக்கான பௌதீக அணுகல் மற்றும் வாக்கொன்றைச் செலுத்துவதற்கான இயலுமை, தேர்தல் பற்றிய தகவல்களுக்கான அணுகல் உள்ளிட்ட ஒதுக்கப்பட்ட குழுக்கள் எதிர்கொள்ளும் அணுகற் பிரச்சினைகள் அத்துடன் ஒதுக்கப்பட்ட சமூகங்களின் தேவைகளைச் சந்திப்பதற்கான தேர்தற் தகவல்கள்/வாக்காளர் அறிவு ஆகியவற்றை இலக்குவைத்தல் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துவதற்கு இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் ஒன்றிணைந்த முன்னணி மற்றும் அதன் உப கொத்தணி உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இலங்கையின் சூழமைவில் ஒதுக்கப்பட்ட மக்களின் மீது தாக்கம் செலுத்துகின்றதான பூகோள அரசியல் மற்றும் சமூக-பொருளாதார இயக்கவியல்களின் பின்னணியிலும் இந்நிகழ்ச்சித்திட்ட இடையீட்டை இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் ஒன்றிணைந்த முன்னணி சூழமைவுப்படுத்தும். அரசியல் ரீதியில் இதன் அர்த்தம், இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் ஒன்றிணைந்த முன்னணியும் ஏனைய இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களும் இலங்கையில் இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் மீதான சமவாயத்தை நடைமுறைப்படுத்தும் சூழமைவில் தமது தேர்தல் உரிமைகளுக்காக ஆதரித்து வாதாடுவதற்காக அந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தங்களின் தற்போதுள்ள வலையமைப்புகளைப் பயன்படுத்தி வருவதுடன் உப கொத்தணிகளையும் பயன்படுத்தவுள்ளன என்பதாகும்.
கருத்திட்டக் குறிக்கோள்கள்
-
தேர்தல் மறுசீரமைப்பிற்கான ஆதரித்துவாதாடலை ஒருங்கிணைத்தல், நடைமுறைப்படுத்தல் அத்துடன் தேர்தல்களில் பங்குபற்றல் மற்றும் உள்ளடக்கத்தின் மீது கவனம் செலுத்தும் சிவில் சமூக நிறுவனங்களின் செயற்குழுவிற்குத் தலைமை வகித்தல்.
-
தேர்தற் செயன்முறை தொடர்பில் இயலாமையுடைய நபர்களையும் ஏனைய ஒதுக்கப்பட்ட சமுதாயங்களையும் பாதிக்கும் பாரிய தேர்தற் பிரச்சினைகளை இனங்காணல்.
-
இயலாமை பற்றிய தரவுகள் மற்றும் மூலோபாயங்கள் உள்ளடங்கலாக பங்குபற்றல் மற்றும் உள்ளடங்கற்தன்மை மிக்க தேர்தல் மறுசீரமைப்புகள் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகப் பிரதான தேர்தல் பங்கீடுபாட்டாளர்களின் கொள்திறன்களை விருத்தி செய்தல்.
-
பங்குபற்றல் மற்றும் உள்ளடக்கம் என்னும் கொத்தணியின் கீழுள்ள தேர்தல் மறுசீரமைப்புகளுக்கான விதப்புரைகளை நடைமுறைப்படுத்தலை நோக்கி முன்கொண்டு செல்லுதல்.
-
தேர்தல் மறுசீரமைப்புகளுக்காகக் கூட்டாக ஆதரித்து வாதாடலில் ஈடுபடும் பொருட்டு உப–கொத்தணி உறுப்பினர்களுடனும் கொத்தணிகளிடையேயும் ஒருங்கியைபொன்றை உருவாக்குதல்.